ஆதார் கார்டில் தகவல்களை மாற்ற யூஐடிஏஐ (UIDAI) சில முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில், சில விவரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே திருத்த அனுமதி உள்ளது. அதே நேரத்தில், முகவரி மற்றும் மொபைல் எண்களை எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம்.

பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் பேரை மாற்ற விரும்பும் சந்தர்ப்பத்தில், யூஐடிஏஐ அனுமதிக்கிறது. ஆனால், இது 2 முறை மட்டுமே செய்யலாம். செல்லுபடியாகும் ஆதாரச் சான்றிதழ் கட்டாயம் தேவை.

ஆதார் கார்டில் பிறந்த தேதி தவறாக உள்ளதெனில், ஒரு முறை மட்டுமே திருத்த வாய்ப்பு உள்ளது. பிறகு மாற்ற முடியாது. பிறந்த சான்றிதழ் அல்லது அரசு வெளியிட்ட ஏதேனும் ஆவணம் தேவை.

நீங்கள் ஒரு புதிய இடத்திற்கு மாற்றமடைந்தால் முகவரியை எளிதில் புதுப்பிக்கலாம். இது ஆன்லைனில் அல்லது ஆதார் சேவை மையத்திலேயே செய்யலாம். வாடகை ஒப்பந்தம், மின்சாரம், நீர் கட்டண ரசீது போன்ற சான்றுகள் தேவைப்படும்.

பாலினம் தவறாக இருந்தால், ஒரு முறை மட்டுமே மாற்ற அனுமதி. சரியாக சரிபார்த்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.

மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்படுவது முக்கியம். OTP சேவைகள் எல்லாம் இதன்மூலம் இயங்குகின்றன. தேவையான எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். இது ஆன்லைனில் செய்ய முடியாது. ஆதார் மையத்தில் மட்டும் செய்யவேண்டும்.

எந்தவொரு மாற்றத்திற்கும் செல்லுபடியாகும் ஆவணங்கள் தேவை. சில நேரங்களில், மூல ஆவணங்களையும் சமர்ப்பிக்கச் சொல்லப்படலாம். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் இந்த மாற்றங்களைச் செய்யலாம்.

தகவல்களை புதுப்பிக்கும் முன் இரண்டு முறை சரிபார்த்து அனுப்புங்கள். தவறுகள் ஏற்பட்டால், மீண்டும் திருத்த முடியாமல் பிரச்சனை உருவாகலாம்.