ஏமனில் ஹவுதி  கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இஸா எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா மேற்கொண்ட விமான தாக்குதலில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஹவுதி குழு தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டுப்பாடு CENTCOM இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. இது மார்ச் 15 முதல் அமெரிக்கா மேற்கொண்டுள்ள தொடர் தாக்குதல்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் மிகவும் மோசமான தாக்குதலாக பதிவாகியுள்ளது.

ஹவுதி இயக்கத்தால் நடத்தப்படும் அல்மசீரா சாட்டிலைட் செய்தி சேனல், தாக்குதலுக்குப் பின் உயிரற்ற உடல்களை காண்பிக்கும் காட்சிகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன், CENTCOM வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹவுதி குழுவின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கும் இந்த எண்ணெய் துறைமுகத்தை அழிக்கவே நடவடிக்கை எடுத்தோம். ஏமன் மக்களுக்கு எதிராக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை” எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், உயிரிழப்பு குறித்து அமெரிக்கா எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஹவுதிகுழு என்பது ஏமனின் வடக்குப் பகுதியில் இருந்து தோன்றிய சைய்தி ஷியா இஸ்லாமிய அரசியல் மற்றும் ஆயுத இயக்கமாகும். 1990களில் உருவான இந்தக் குழு, 2014-ஆம் ஆண்டு ஏமனின் தலைநகரான சனாவை கைப்பற்றி, அந்நாட்டின் அத்தாட்சியுள்ள அரசை வீழ்த்தியது. இதையடுத்து சவுதி தலைமையிலான கூட்டணி அரசுக்குத் துணை நின்று ஆள்கட்சி-தீவிரவாத குழுவாக பிரிந்த நிலையில், யேஏன் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியாக மாறியது. ஹவுதி இயக்கம் தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவுதி அரசின் எதிரிகளாகவும், ஈரான் ஆதரவு குழுவாகவும் செயல்பட்டு வருகிறது.