சிம்மம் ராசி அன்பர்களே,
இன்று பிள்ளைகளால் சந்தோஷம் கண்டிப்பாக ஏற்படும். சொல் பேச்சு கேட்கவில்லையே என்று மனவருத்தம் இருக்கும். கவலை வேண்டாம். பொறுமையாக இருந்து எந்த செயலையும் ஈடுபடுங்கள். அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். இன்னல்கள் தீர்ந்து விடும்.
நிதி நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறும் சூழல் உள்ளது. அனைவரது ஆதரவும் கிடைக்கும். திறமையால் வெற்றி பெற முடியும். சிறப்பான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். பயணத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். இன்று பெண்களுக்கு உயர்வான எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் வெளிப்படும்.
இன்று மாணவர்கள் கல்வி மீது முழு அக்கறை கொள்ள வேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்: 1, 3 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் சிவப்பு நிறம்