சிம்மம் ராசி அன்பர்களே, 

இன்று பார்த்து பக்குவமாக பேச வேண்டும். நிதானித்து செயல்படுவது நல்லது. சந்திராஷ்டமம் ஆரம்பிக்கும் காரணத்தினால். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். திட்டம் தீட்டி வெற்றி வெற்றி பெற முடியும். தொழில் வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைப்பீர்கள் பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் சொந்தம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் இருக்கும். கடன்கள் அதிக வட்டிக்கு வாங்க வேண்டாம். சாதகமான பலன் இருக்கும்.

பெண்கள் அக்கம் பக்கத்தில் பேசும் போது கவனமாக இருங்கள். தேவையற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். இன்று மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். ஆசிரியர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஒன்று மற்றும் மூன்று

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்