
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த கங்குவா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தன் 45-வது படத்தில் நடித்து வரும் நிலையில் திரிஷா ஹீரோயின் ஆக நடிக்கிறார். அதன் பிறகு தன்னுடைய 44 வது படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் போன்றவைகள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வெகுவாக வைரலாகி வருகிறது.