சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. மனித வாழ்க்கையில் நடக்கும் சிறு சிறு தனிப்பட்ட சம்பவங்களை கூட இன்றைய காலகட்டத்தில் பலரும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதே போன்று சமீபத்தில் புதுமணத் தம்பதியர்  தங்களது முதல் இரவை வீடியோவாக பதிவு செய்ய விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மணமகனின் சகோதரர் முதலிரவு அறையில் மேலே ஏறி நின்று பார்ப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று ஒருவரின் தனிப்பட்ட சம்பவங்களில் இடையூறாக இருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய குற்றச்சட்டத்தின் படி 354c பிரிவின் கீழ் இக்குற்றத்திற்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த சட்டத்தின் கீழ் ஒருவரின் தனிப்பட்ட பகுதிகளை படம் எடுப்பது, சமூக வலைதளங்களில் பரப்புவது குற்றமாக கருதப்படுகிறது. இந்த வீடியோவை தொடர்ந்து பலரும் இதுபோன்ற நெருங்கிய தருணங்களை பதிவு செய்து கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்துகின்றனர் என கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நினைவுகளை பதிவு செய்வது தவறல்ல இருப்பினும் அதனை வெளிப்படையாக பகிரும் போது அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும், இன்றைய இளைஞர்கள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் சட்ட பிரச்சனைகள் மற்றும் சமூக எதிர்வினைகள் குறித்து விழிப்புணர்வு தேவைப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.