
சென்னையில் நேற்று ஃபார்முலா 4 கார் ரேஸ் தொடங்கியது. இதற்காக போலீஸ் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆணையராக பணிபுரிந்து வந்த சிவகுமார் (53) நேற்று பகல் சுமார் 12.45 மணியளவில் அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைவதாக கூறிய முதல்வர் ஸ்டாலின் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த உதவி காவல் ஆணையர் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.