இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு கோடி முதல் 5 கோடி ரூபாய் வரையிலான பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ்வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் பல்வேறு வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அதன்படி தற்போது எச்டிஎப்சி வங்கியும் பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது.

புதிய வட்டி விகிதங்கள்:

46 – 60 நாட்கள் : 5.75%

61 – 89 நாட்கள் : 6%

90 நாட்கள் – 6 மாதம் : 6.50%

6 மாதம் – 9 மாதம் : 6.65%

9 மாதம் – 1 ஆண்டு : 6.75%

1 ஆண்டு – 15 மாதம் : 7%

15 மாதம் – 2 ஆண்டு : 7.15%

2 ஆண்டு – 10 ஆண்டு : 7%

சீனியர் சிட்டிசன்களுக்கு:

5 ஆண்டு வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு சீனியர் சிட்டிசன்கள் கூடுதலாக 0.50% வட்டி விகிதம்.