இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்கின்றனர். இதில் வட்டி வருமானமும் அதிகம் கிடைக்கின்றது. வங்கிகள் அடிக்கடி பிக்ச்சர் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை உயர்த்துகின்றன. 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்று முன்னணி வங்கிகள் தங்களுடைய பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்த நிலையில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் சில வங்கிகளும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.

சிட்டி யூனியன் வங்கி:

சிட்டி யூனியன் வங்கி மூன்று கோடிக்கும் குறைவான பிக்சர் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆண்டுக்கு 5% முதல் 7.5% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதுவே மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

டிசிபி வங்கி:

தனியார் துறை வங்கியான டிசிபி வங்கி 3 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. ஆண்டுக்கு 3.75 சதவீதம் முதல் 8.05 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும். மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 8.55 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

கர்நாடகா வங்கி:

கர்நாடகா வங்கி மூன்று கோடி ரூபாய்க்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ள நிலையில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொது முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு எட்டு சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது.