ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெட் பிக்ஸ் ஊடகத்தின் நிறுவனரும் ஊடகவியலாளருமான பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்திருக்கும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது. இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

பங்கேற்பாளரின் கருத்துக்கு நெறியாளரையும் சேர்த்து கைது செய்யும் இந்த செயல்பாடு ஊடக சுதந்திரத்தை குழி தோண்டி புதைக்கும் கொடுஞ்செயலாக உள்ளது. கடந்த 26 முதல் 2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடத்திய கொடுங்கோல் ஆட்சிக்குப் பிறகு 10 ஆண்டு காலம் அதிகாரத்தை இழந்து நின்றது மறந்து போனதா? அதிகார திமிரிலும் பதவி தரும் மமதையிலும் எத்தனை காலத்திற்கு ஆட்டம் போடுவீர்கள் பெருமக்களே? பெரும் சாம்ராஜ்யங்களும் பேரரசுகளுமே வீழ்த்தப்பட்டிருக்கின்றன என்று காட்டமாக பேசியுள்ளார்.