கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் தாத்தா மற்றும் பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது தாத்தா ஸ்ரீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் ஆகியோர் மீது அடுத்தடுத்த மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திருக்குமரனின் தாயார் ரேவதி இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்து உள்ளார்.

ஆனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் மொத்த மின்சார இணைப்பையும் துண்டித்த நிலையில் ரேவதி மட்டும் இந்த விபத்தில் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.