
குஜராத் மாநிலத்தில் உள்ள பர்தியாவில் ராஹ்லி(13) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி தனது தந்தையின் வாகன பேட்டரிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக அருகில் இருக்கும் வயலுக்கு சகோதரி உடன் சென்றுள்ளார். அப்போது திடீரென புதன் மறைவில் இருந்து வந்த சிங்கம் ராஹ்லியை கவ்விகொண்டு தப்பி ஓடியது. இதனால் பயந்து போன மற்றொரு சிறுமி தனது தந்தையிடம் சென்று நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை ராஹ்லியை தேடி அந்த பகுதிக்கு சென்றார்.
அப்போது 400 மீட்டர் தூரத்தில் சிங்கம் சிறுமியை கடித்து குதறிக் கொண்டிருந்தது. அவரது தந்தையை பார்த்து சிங்கம் உருமியது. ஆனாலும் மகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சிங்கத்தை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்து விரட்டினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் கடந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது அப்பகுதியில் இரண்டு சிங்கங்களும் ஒரு குட்டியும் கடந்த மூன்று நாட்களாக சுற்றி திரிவது தெரியவந்தது. அவற்றைப் பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.