மகாராஷ்டிரா மாநிலம் குர்லா பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா. இவர் தனது தாயார் சபிரா பானோ அஸ்கர் ஷேக் தனது மூத்த சகோதரி ஜைனபிக்கு தான் எப்போதும் ஆதரவாக இருப்பதாக நினைத்துள்ளார். இது அவ்வப்போது தாய் மகள் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று ரேஷ்மாவுக்கும் சபிராவுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ரேஷ்மா தனது தாய் சபிராவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் இது குறித்து தனது சகோதரனுக்கு தகவல் கொடுக்க சகோதர சகோதரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் சபிராவை பார்த்த ஜைனபி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்தவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ரேஷ்மா காவல் நிலையத்தில் சென்று சரண் அடைந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ரேஷ்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.