நடப்பு டி20 உலகக் கோப்பை 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் இந்தியா பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கிய நிலையில் விராட் கோலி 9 ரன்களில் ஆட்டம் இழக்க அதன் பின் களமிறங்கிய ரிஷப் பண்ட்டும் சிறிது நேரத்தில் ஆட்டத்தை இழக்க  சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். இவரும் ரோகித் சர்மாவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை உயர்த்தினர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 57 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்திக் பாண்டியா 23 ரன்களும், ஜடேஜா 17 ரன்களும், அக்சர் படேல் 10 ரன்களும் எடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் கேட்ச் அவுட் ஆகினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்த ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.