
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தனிநபர் நிதியைப் பாதிக்கும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். உங்கள் டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளில் நாமினையை சேர்ப்பதற்கு கடைசிநாள் செப்டம்பர் 30,2023 ஆகும். இதற்குமுன் டிமேட், டிரேடிங் கணக்குகளில் நாமினியைச் சேர்பதற்கான கடைசி நாளாக மார்ச் 30,2023 ஆக செபியால் நிர்ணயிக்கப்பட்டு, அதன்பின் அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 கடைசி நாளாக அறிவித்தது. இந்த காலக்கெடு முடிய இன்னும் 7 நாட்களே உள்ளது. இந்த தேதிக்குள் நாமினியைச் சேர்க்கவில்லை என்றால் உங்கள் கணக்குகள் முடக்கப்படும் எனவே டிமேட், டிரேடிங் கணக்குகளில் நாமினியைச் சேர்க்கவும்.
செப்-30 ஆம் தேதிக்குள், பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா , தபால் நிலைய வைப்புத்தொகை மற்றும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள், இம்மாத இறுதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் சேமிப்புக் கணக்குகள் முடக்கப்படும்.
2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் மாற்றாமல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள வங்கிக்குச் சென்று அதை மாற்றவும், செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மாற்றவில்லையெனில் அது செல்லாமல் போகும் அபாயம் ஏற்படலாம். பணம் மற்றும் முதலீடுகளுக்கான நாட்களைத் தவிர, அடுத்த மாதம் முதல் ஆதார் மற்றும் அரசு வேலைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் ஒரே ஆவணமாகிவிட்டன. பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1, 2023 முதல் நாட்டில் நடைமுறைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.