
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை தவிர்த்து இதர மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரையில் வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான கால அட்டவணை வெளியிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம் பணிகளை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்கும் நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு முன்னதாக ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18ம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று பட்டியலை சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.