
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவ தொகுத்தறி மதிப்பெண்களை TNSED செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடைத்தாள்களை திருத்தியப்பிறகு தொகுத்தறி மதிப்பெண்களை கேள்வி வாரியாக TNSED செயலியில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதனை செயலியில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 9 ஆகும். இது தொடர்பான வழிகாட்டுதல்களை வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி வளாகங்களை சுத்தம் செய்தல் மற்றும் முதல் நாளை திருத்திய மதிப்பெண்களை மாணவர்களிடம் வழங்குதல் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.