
தமிழகத்தில் அங்கன்வாடிகளில் 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த உதவியாளர்களை கொண்டு காலியாக உள்ள பணியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு 25% ஊழியர்களை கொண்டு நியமிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அரசியல் விதிமுறையின்படி அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்திற்கு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.