ராமநாதபுரம் மாவட்டம் நெம்மேனி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார்(41). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி இரவு நேரம் சரவண குமார் 13 வயது சிறுவனை உழவர் சந்தை பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதன் பிறகும் சரவணகுமார் சிறுவனை மிரட்டி பலமுறை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுவன் தனது தாயிடம் தெரிவித்து அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று சரவணகுமாரை கைது செய்தனர்.