ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் ஆபுவில் அமைந்துள்ள பிரபல தில்வாரா ஜெயின் கோவிலுக்கு வெளியே ஒரு பெண் பக்தையை நோக்கி ஒரு முதியவர் மோசமான வகையில் புகைப்படங்கள் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த முதியவர், மார்டன் உடையில் காத்திருந்த பெண்ணின் கால்கள் பகுதியை தனது மொபைலில் போட்டோ எடுத்துள்ளார். பெண்ணுக்கு சந்தேகமாக இருந்ததால், அவர் நேரடியாக அவரிடம் சென்று மொபைல் கேமராவில் உள்ள புகைப்படங்களை காண கோரினார்.

பின்னர் தனது புகைப்படங்களை பார்த்த பெண், ஆத்திரமாக முதியவரை எதிர்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “அங்கிள், இது என்ன? என்ன செய்றீங்க? என்னுடைய கால்கள் படம் எதுக்கு எடுக்குறீங்க?” எனத் தொடர்ந்து கேட்டார்.

மேலும், “கோவில்கிட்டே உட்காந்து இதெல்லாம் செய்றீங்களா? வெட்கமா இல்லையா?” என திட்டினார். புகைப்படங்களை அவர் அழித்த பிறகும், எடுத்ததையே மறுத்ததால் அந்த பெண் மேலும் கடும் ஆவேசத்தில் திட்டி விட்டு அந்த இடத்திலிருந்து வெளியேறினார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.