
கேரள மாநிலம் காசர்கோடு அருகே அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாநில பொது சேவை ஆணையம் நடத்தும் துறை ரீதியான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தேர்வுக்கு வந்த மாணவர் ஒருவர் ஹால் டிக்கெட்டை அருகில் வைத்துவிட்டு அமர்ந்திருந்தார். அப்போது திடீரென கழுகு அங்கு வந்தது. ஹால் டிக்கெட்டை அலகால் கொத்தி எடுத்துச் சென்று ஜன்னல் மீது அமர்ந்தது.
இதனை பார்த்து அந்த மாணவர் அதிர்ச்சியடைந்தார். கழுகின் மேல் கல் எரிந்து விரட்டினால் கழுகு ஹால் டிக்கெட்டை எடுத்து பறந்து சென்று விடும். இதனால் அனைவரும் செய்வதறியாமல் திகைத்தனர்.
சிறிது நேரம் கழித்து கழுகு ஹால் டிக்கெட்டை கீழே போட்டு விட்டு சென்றது. உடனே மாணவரும் ஹால் டிக்கெட்டை எடுத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.