
தமிழகத்திற்கு அமித்ஷா நேற்று வருகை புரிந்த நிலையில் கூட்டணி குறித்த அறிவிப்பு மற்றும் புதிய மாநில தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதேபோன்று இரண்டு அறிவிப்புகளும் வெளியாகிவிட்டது. அதன்படி தமிழ்நாட்டின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன் பிறகு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கும் என்ற அமித்ஷா கூறியுள்ளார். அதன் பிறகு அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என்றும் கூட்டணி அமைக்க அதிமுக எந்தவித நிபந்தனையும் கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த கூட்டணியில் குழப்பம் கிடையாது மாநிலத் தலைவர் மாற்றப்பட்ட பிறகு தான் கூட்டணி உறுதியானது என்று கூறுவது முற்றிலும் தவறு என்றும் கூறினார். அதோடு அண்ணாமலை இனி தேசிய அரசியலில் ஈடுபடுவார் என்றும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் கூட்டணி உறுதியான நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பசுமை இல்ல வீட்டில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விருந்தில் அமித்ஷா, அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.