தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் நடிப்பில் யானை என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அருண் விஜயின் பார்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இவர் தற்போது இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடிகர் அருண் விஜய்க்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நடிகர் அருண் விஜய் தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அருண் விஜய் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Arun Vijay (@arunvijayno1)