
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 5 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது நுரையீரல் தொற்று இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த தகவல் நடிகர் மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என பலரும் கூறுகிறார்கள். இந்நிலையில் மருத்துவமனை தரப்பிலிருந்து நடிகர் மோகன் லால் நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் நடிகர் விஜயுடன் சேர்ந்து ஜில்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மோகன்லால் மலையாள சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.