உடல்நலக்குறைவால் வீட்டில் சிகிச்சையில் இருந்த அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மதியம் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது.  இந்நிலையில் நடிகர் அஜித்தின் தந்தையின் மறைவையொட்டி, நடிகர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் விஜய், அஜித்திடம் ஆறுதல் கூறினார். முன்னதாக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நடிகர்கள், திரையுலகினர், அரசியல் கட்சியினர் பலரும் நேரில் சென்று சுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.