
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் நடிகை திரிஷா நேற்று தன்னுடைய வளர்ப்பு நாய் இறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதன்பிறகு எக்ஸ் பக்கத்தில் காலமானார் விஜய் என்ற ஹேஷ்டேக் வைரல் ஆகி வருகிறது. அதாவது அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சில விஷமிகள் இதுபோன்று ஹேஷ்டைக்கை வைரல் ஆக்குகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் காலமானார் அஜித் என்ற ஹேஷ்டேக்கும் எக்ஸ் பக்கத்தில் வைரல் ஆகிறது. மிகவும் மோசமான வார்த்தைகளால் இதுபோன்ற ஹேர் ஸ்டைக்கை வைரலாக்கி வருகிறார்கள். அதாவது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரும் மாறி மாறி இது போன்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி சமூக வலைதளத்தில் சண்டை போடுவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் தற்போது ஒரு பிரச்சனை பரபரப்பாக பேசப்படும் நிலையில் அதை திசை திருப்பக் கூட இது போன்ற ஹேஷ்டேக் வைரல் ஆக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஹேஷ்டேக் வைரலாக்கி வரும் நிலையில் இரு ரசிகர்களும் இதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று ரிப்போர்ட் அடித்து வருகிறார்கள்.