இன்றைய காலகட்டத்தில் நாம் சமூக வலைத்தளங்களில் பல செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் சில செய்திகளை பார்க்கும்போது வித்தியாசமாகவும் இப்படி கூடவா நடக்கும் என்று நாம் வியக்கும் வகையிலும் உள்ளது. அதன்படி சீனாவின் நகர வீதியில் ஸ்டார் ஒன்றை அமைத்து அதில் ஒரு அட்டையில் காதலையும் மற்றொரு அட்டையில் தோழமையையும் விலை போட்டு இளம்பெண் ஒருவர் விற்று வருகிறார்.

அதில் கட்டி அணைப்பதற்கு 11ரூபா ய், ஒரு முத்தத்திற்கு 115 ரூபாய், ஒன்றாக படம் பார்க்க வேண்டும் என்றால் 150 ரூபாய், வீட்டு வேலைகளை செய்து தர 200 ரூபாய், ஒன்றாக மது அருந்த 4100 ரூபாயும் கட்டணம் விதித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.