
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் பழனி (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் காயத்ரி 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அப்போது அவருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் இறந்தது. இந்நிலையில் குழந்தை இறந்ததால் பழனி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இவர் சரிவர யாரிடமும் பேசாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நாட்டறம்பள்ளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.