
தமிழ், தெலுங்கு, மலையாள பட திரையுலகில் முன்னணி நாயகியாக உயர்ந்து உள்ளார் சாய்பல்லவி. மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார். மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சாய்பல்லவி 10 வருடங்களாக காதலிப்பதாகவும் அவருடைய காதலர் குறித்தும் பேசிய இணையத்தில் வைரலாகி வருகிறது .
அதாவது பேட்டி ஒன்றில், 10 வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் வேறு யாரும் அல்ல மகாபாரத கதையில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யு தான் என்று கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதை பார்த்து ரசிகர்கள் யாரோ நடிகரை தான் சொல்ல போகிறார் என்று பார்த்தால் இப்படி சொல்லிவிட்டாரே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.