
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமிக்கு கைகளில் 6 விரல் இருந்ததால் அதில் ஒரு விரலை அகற்றுவதற்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அதன்படி நேற்று காலை சிறுமிக்கு ஆப்ரேஷன் நடைபெற்ற நிலையில், சிறுமியின் நாக்கில் தையல் போட்டு பிளாஸ்டர் ஒட்டி இருந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவரிடம் கேட்டபோது சிறுமியின் நாக்கில் பிரச்சனை இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ததாக கூறினர்.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியின் விரலை அகற்றுவதற்காக தான் வந்ததாக கூறினார். இதனையடுத்து நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்த மருத்துவர்கள் சிறுமியின் விரலை அகற்றினர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் சுகாதாரத் துறை மந்திரி கோழிக்கோடு அரசு கல்லூரி மருத்துவமனை டீனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.