இந்தோனேஷியா தலைநகர் ஜகத்தாவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு விமானத்தை ஆய்வு செய்வதற்காக ஊழியர் ஒருவர் சென்றுள்ளார். அவர் ஆய்வை முடித்துவிட்டு கீழே இறங்க முயன்ற போது அவர் நிற்பதை கவனிக்காமல் ஊழியர்கள் படிக்கட்டை எடுத்துள்ளனர். அந்த ஊழியர் விமானத்தை திறந்து படிக்கட்டில் கால் வைத்த போது திடீரென படிக்கட்டு நகர்ந்ததால் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் புனே பகுதியைச் சேர்ந்த விவின் அந்தோணி டொமினிக் என்பது தெரியவந்துள்ளது. விமானத்தை அதிகாரி ஆய்வு செய்துவிட்டு கீழே இறங்குவதற்கு முன்பாக ஊழியர்கள் படிக்கட்டை அகற்றியது மிகவும் அலட்சியத்தை காட்டுவதாக கூறியுள்ளார்‌. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.