தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் மோகன்லால். இவரது நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லூசிஃபயர். இந்த படத்தை பிரபல நடிகர் பிரித்திவிராஜ் தான் இயக்கியிருந்தார். லூசிஃபயர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு எம்புரான் என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியார், டோவினோ தாமஸ், பிரித்திவிராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் படம் வெளியான சில மணிநேரங்களில் முழு படமும் fillmyzilla, movierulex, telegram, Tamil rockers போன்ற தளங்களில் வெளியானது. இதனால் படக் குழு அதிர்ச்சியில் உள்ளது.