உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் மின்னல் பாய்ந்து 38 பேர் பரிதாபமாக  பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக பிரதாப்கர் மாவட்டத்தில் 11 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கனமழையின் போது விவசாய நிலத்தில் வேலை செய்தவர்களும், மழைக்கு மரத்தின் கீழே ஒதுங்கியவர்களும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.