
கள்ளக்குறிச்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷச்சாராயத்தை விற்ற கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன், ஜோசப் ராஜா, முத்து, சின்னத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மருத்துவ பரிசோதனையில் சாராயத்தில் மெத்தனாலின் அளவு அதிகரித்து தான் உயிரிழப்பு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து சாராய வியாபாரியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராமர் என்ற சாராய வியாபாரி தனக்கான பங்கை வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். அப்போது ராமர் தந்தை அதை குடித்ததும் அரை மணி நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னுடைய தந்தை மருத்துவமனையில் சேர்த்த ராமர் மற்ற வியாபாரிகளுக்கு போன் செய்து சாராயத்தை விற்க வேண்டாம் என்றும் அதில் விஷம் கலந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பின்னர் வியாபாரிகள் சாராயத்தை கொட்டி அழித்து உள்ளார்கள். ஆனால் கண்ணுக்குட்டி என்ற வியாபாரி மட்டும் விஷம் கலந்திருந்தது தெரிந்தும் அதை விற்பனை செய்துள்ளார். அதாவது தன்னிடம் இருந்து 330 லிட்டர் விஷ சாராயத்தில் 250 லிட்டர் வரை விற்றிருக்கிறார். இவரிடம் வாங்கி குடித்தவர்கள் தான் தற்போது உயிரிழந்துள்ளார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.