ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாட்டின் தலைநகரம் பிராகா. இங்கிருந்து சுலேவேக்கியா நாட்டின் வழியாக ஹங்கேரி தலைநகர் புடாபெட்ஸ் நகருக்கு ரயில் சேவையானது இயக்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு வழக்கம்போல் ரயில் சேவை இயக்கப்பட்ட நிலையில் நேற்று பிராகாவில் இருந்து ரயில் புறப்பட்டது.

அப்போது சோவி சம்கி நகரில் பேருந்து ஒன்று நின்றது. இந்தப் பேருந்தில் பயணிகள் இருந்த நிலையில் ரயில் செல்லும் சமயத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது வேகமாக வந்த ரயில் எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதன் பிறகு 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.