
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் பாளையம் கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உமாராணி (40) என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் தன் பெற்றோருடன் காட்டூர் பகுதியில் வசித்து வந்தார். இந்த மருத்துவமனையில் மக்களை தேடி மருத்துவம் திட்ட நர்சாக பிரியா என்ற 21 வயது பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி விக்னேஷ்வர் என்ற கணவர் இருக்கிறார். இந்நிலையில்பிரியா அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு மக்களை சந்தித்து மருந்துகள் வழங்க சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அப்போது பணியில் இருந்த டாக்டர் உமாராணியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்தவர் என்பதால் இந்த அதிர்ச்சி தகவலை கேட்டதும் நாற்காலியில் இருந்தவாரே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இருவரும் ஒரே நாளில் இறந்த போதிலும் வெவ்வேறு இடத்தில் இறந்ததால் இந்த சம்பவம் வெளியே தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தான் உண்மை தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.