பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரை அவருடைய மாமியார் மூன்று லட்சம் பணத்திற்காக விற்றுள்ள சம்பவம் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அந்த பெண்ணின் மாமியார் வேலை வாய்ப்பு என்ற பெயரில் ஐந்து இளைஞர்களோடு சேர்ந்து சதி திட்டம் செய்து தனது மருமகளை  அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு பின்பு ரயிலில் அழைத்து சென்றுள்ளார்கள். பின்பு ராஜஸ்தானில் உள்ள ஒரு  நபரிடம்  அந்த பெண்ணை விற்று 3 லட்சம் பணத்தை வாங்கிவிட்டு வந்துள்ளார்.

அந்த நபர் ஒரு மாதத்திற்கு மேல் அந்த பெண்ணை  தன்னுடைய வீட்டில் வைத்து கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்து எப்படியோ தப்பித்த அந்த பெண் அடையாளம் தெரியாத நபரின் செல்போனை  வாங்கி தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அப்பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்து அந்த பெண்ணை  மீட்டுள்ளார்கள். இதனையடுத்து இந்த பெண்ணின் குடும்பத்தினர் மாமியார் மற்றும் ஐந்து இளைஞர்களை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை  வைத்துள்ளார்கள்.