தாய்லாந்தை சேர்ந்த டிக் டாக் பிரபலம் தணக்கம் காந்தி என்பவர் 75 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி இரண்டு பாட்டில் விஸ்கியை 20 நிமிடங்களில் குடித்து முடித்துள்ளார். ஆனால் அதனை குடித்து முடித்த சில நொடிகளிலேயே காந்தி சுயநினைவு இழந்து கீழே விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பந்தயம் கட்டிய எக்கச்சார்ட் மீப்ரோமை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.