மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 13 வயது சிறுமியின் தாய் தந்தை விவாகரத்து செய்த குழந்தை தந்தை வீட்டாருடன் இருந்தது. இந்நிலையில் குழந்தையின் அத்தை பூஜா தன்னுடைய அண்ணன் மகள் என்றும் பாராமல் சிறுமியை கடுமையான முறையில் கொடுமைப்படுத்தி உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய காலுக்கு அடியில் சிறுமியை பிடித்து வைத்துக்கொண்டு கொடூரமாக  அடித்து தாக்குகிறார். அந்த சிறுமி வலி தங்கமால்  தன்னை விட்டு விடுங்கள் என்று கதறுகிறார். இருப்பினும் மனம் இறங்காத அத்தை கொடூரமான முறையில் திட்டி அடித்து உதைக்கிறார்.

அந்தப் பெண் என்னை எதிர்த்து பதில் சொல்ல எவ்வளவு தைரியம் என்று கூறிக்கொண்டே அடிக்கிறார். அந்த சிறுமி அழுது கொண்டே தன் பாட்டியிடம் அடிக்க வேண்டாம் என சொல்லுங்கள் என்கிறார். அதாவது தன் தந்தையின் அம்மாவிடம் சிறுமி கூற  தன் மகளை அவர் தடுத்து நிறுத்துகிறார். இருப்பினும் அவருடைய பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பூஜா குழந்தையை அடித்த நிலையில் அதனை அவர் வீடியோவாக எடுத்து சிறுமியின் தாய்க்கு அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயாரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Harshit Pandey (@harshit_p20)