நியூயார்க் நகரத்தில் உள்ள மெட்ரோ ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரயிலில் உயிரிழந்த ஒருவரோடு மர்ம நபர் ஒருவர் பாலியல் உறவில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அதிகாலை 12:30 மணியளவில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பாதுகாப்புக் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் குற்றவாளி, ரயிலில் உள்ளோர் இறங்கியதும், அந்த உடலின் அருகே சென்று பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறார்.

தற்போது குற்றவாளி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரை அடையாளம் காண NYPD அதிகாரிகள் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளி கடைசியாக நீல நிற பேஸ்பால் தொப்பி, கருப்பு ஹூடித் தையலுடன் கூடிய ஜாக்கெட், மஞ்சள் நிற ஹூடெட் ஸ்வெட்ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், சிவப்பு-வெள்ளை நிற ஸ்னீக்கர் ஷூ அணிந்த நிலையில், ஒரு பேக் பேக் தூக்கிக்கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை பற்றிய தகவல்கள் இருப்பின், 800-577-TIPS என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு NYPD பொதுமக்களிடம் கேட்டுள்ளது.