
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின்வெற்றியை ஹைதராபாத்தில் வைத்து படகுழு கொண்டாடியுள்ளது. இந்த பார்ட்டியில் தளபதி விஜயும் கலந்து கொண்டுள்ளார். படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தின் கொண்டாட்டம் முடிவடைந்த பிறகு நடிகர் விஜய் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அப்போது விமான நிலையத்திற்கு வந்த நடிகர் விஜய் பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் தனியாக வந்ததோடு சாதாரண பயணிகள் இருக்கும் வரிசையில் சோதனை வரிசையிலும் நுழைந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகர் விஜய் மிகவும் எளிமையான மனிதர் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Thalapathy Vijay Spotted At Hyderabad Airport Today 😍💥🔥#Varisu #VarisuPongalWinner #ThalapathyVijay #Thalapathy67 @actorvijay pic.twitter.com/B0awz8Snxj
— ஊத்துக்குளி மோகன் (@Mohan86908421) January 23, 2023