
இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பல வேலைகளை எளிதில் முடித்து விட முடியும். அந்த வகையில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தற்போது வீட்டில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே மாற்ற முடியும். அதற்கு முதலில் tamilnilam.tn.gov.in என்ற இணையதள சேவையை அரசு அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த இணையதளத்திற்கு சென்று அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க வேண்டும். கடைசியில் உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்காக 60ரூபாயும், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு 460 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். இதனை அடுத்து விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தாசில்தாருக்கு அனுப்பப்படும். அங்கு விசாரணை நடத்தப்பட்டு பட்டா மாறுதல் செய்யப்படும்.