
90களில் அனைவருடைய மனதிலும் நீங்காத இடத்தை பிடித்த காமெடி நடிகர் வடிவேலு. வடிவேலு காமெடி பார்த்து வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகர் மத்தியில் பிரபலமானவர். உடல் மொழி நகைச்சுவையால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர். வெள்ளித்திரை தொடங்கி மீம்ஸ் வரை கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக மாமன்னன் படம் வெளியானது.

இதனை அடுத்து முழுக்க முழுக்க காமெடிகதாபாத்திரத்தில் வடிவேலு கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வடிவேலுவின் மகன் சுப்ரமணியன் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் வடிவேலு போலவே இருக்கிறாரே என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.