மற்றவர்களுக்கு செல்போன் நம்பரை கொடுக்காமல் வாட்ஸ் அப் தொடர்பை குறியீட்டோடு எவ்வாறு பகிரலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒருவரோடு தொடர்புகளை பகிர்ந்து கொள்வதற்கு வாட்ஸ்அப் உதவுகிறது. இதன் உதவியோடு  யாரிடமும் தன்னுடைய நம்பரை கூறாமல் தன்னுடைய தொடர்புகளை பகிர முடியும். தெரியாத ஒரு நபருக்கு தன்னிடம் இருந்து ஒரு தகவல்களை பரிமாற வேண்டும் என்றால் கண்டிப்பாக செல்போன் நம்பர் அவர்களுக்கு தெரிந்து விடும்.

அவ்வாறு தெரியாமல் தொடர்பை பகிர்வதற்கு ஸ்மார்ட் whatsapp தொடர்பு உதவுகிறது. இதன் உதவியோடு பயனாளர்கள் வேறு ஒருவரோடு தொடர்புகளை எளிதாக பகிர முடிவதோடு பயனர்களின் தனி உரிமையை அதிகரிக்கவும், தொடர்பு விவரங்களை வேறு யாரும் பெற முடியாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம். இதற்கு முதலில் வாட்ஸ் அப்பை திறந்து அமைப்புகள் விருப்பத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு சுயவிபர புகைப்படத்தின் மேல் வலது பக்கத்தில்  க்யூஆர் குறியீடு ஸ்கேனர் இன் விருப்பத்தை தட்டினால் புதிய பக்கம் திறக்கும். அதன்பிறகு க்யூஆர் குறியீட்டை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். க்யூஆர் குறியீட்டை பகிர்தல் விருப்பம் மேல் வலது மூலையில் தெரியும் அதை தட்டிய பிறகு யாருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களோ அந்த தொடரை பகிர முடியும். வாட்ஸ் அப் நிறுவனம் இந்த புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.