தஞ்சையில் காணாமல் போன வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20,000 ரொக்க பரிசை வழங்கப்படும் என்று தெரிவித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது தனது வளர்ப்பு பிராணி மீதான பாசத்தை எஜமானர் வெளிப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது. தஞ்சாவூரில் கடந்த இரண்டு நாட்களாக நகரின் பல்வேறு இடங்களில் நாய் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், படத்தில் உள்ள வளர்ப்பு நாயை கடந்த மே 23 முதல் காணவில்லை. நாயின் பெயர் சிம்பா, கோல்டன் ரெட்ரீவர் வகையை சார்ந்த வெள்ளை நிறத்திலான இரண்டு வயதுடைய நாய். இதனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரொக்க பரிசை வழங்கப்படும் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சுவரொட்டி அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.