இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்கு சென்ற நிலையில் தற்போது 3-வது முறையாக மீண்டும் விண்வெளிக்கு சென்றுள்ளார். இவர் போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார் லைனர் விண்கலத்தில் விண்வெளி வீரர் புட்ச் வில் ஆகியோருடன் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு கடந்த 5-ம் தேதி புறப்பட்டு சென்றார்.

இவர்கள் நேற்று விண்வெளி நிலையத்தை அடைந்த நிலையில் அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி முடிவடைந்த பிறகு ஜூலை 14ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்கள். இந்நிலையில் விண்வெளியில் அமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தில் காற்றில் மிதந்தவாறு சுனிதா வில்லியம்ஸ் சகவீரர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.