
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பல்வேறு சலுகைகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையி 10% கட்டண சலுகையை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அனைத்து வகையான பேருந்துகளிலும் இருவழி பயணங்களில் இந்த கட்டண சலுகையானது அளிக்கப்படுகிறது.
இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் TNSTC செயலி மூலமாக பெற்றுக்கொள்ளலாம். அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வார இறுதி நாட்களில், பயணம் செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.