சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுடைய குழந்தைகளை பராமரிக்கும் விதமாக 1500 குழந்தைகள் காப்பகங்கள் நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த. காப்பகத்தில் ஆறு மாத முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் பராமரிக்கப்படுவார்கள் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் மூலமாக 1500 குழந்தைகள் காப்பகங்களுக்கான திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளதால் தேவை அதிகம் இருக்கும் இடங்களில் மையங்கள் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்த்து வைப்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அங்கன்வாடி மையங்கள் பிற்பகல் 3:30 மணி வரை மட்டுமே செயல்படுத்தப்படும். ஆனால் குழந்தைகள் காப்பகங்கள் மாலை 5.30 மணி வரையிலும் தேவை இருப்பின் அதன் பிறகும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று மற்றும் நான்காம் பணி நிலைகளில் உள்ள பெண் ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.