
தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் மனோபாலா. பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வெளிவந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் வலம் வந்தவர். இந்த சூழலில் அவருக்கு கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன்பு அவர் காலமானார். மனோபாலாவின் மரணம் ஒட்டுமொத்த கோலிவுட் உலகத்தையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இந்நிலையில் பொதுவாக ஒருவர் காலமானால் அவர்கள் உடைகள் எரிக்கப்படுவது வழக்கம். ஆனால், நடிகர் மனோபாலாவின் மனைவி உஷா அப்படி செய்யாமல் மிகப் பெரிய உதவி செய்துள்ளார். மனோபாலாவின் வாட்ச் ஒன்றை மட்டும். வைத்துக் கொண்டு, அவரின் அனைத்து உடைகளையும், அனாதை இல்லத்திற்கு கொடுத்துள்ளார். மனோ பொதுவாக உதவும் தன்மை கொண்டவர் என்பதால், இறந்தபின்பும், அவர் மற்றவர்களுக்கு உதவியுள்ளார் என்பதற்காகவே உஷா இப்படி செய்துள்ளாராம்.