
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்குவதற்காக ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் சிறப்பு கடன் வழங்கியுள்ளதாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 350 கோடி கடன் உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதியாவு சேதமடைந்த வீடுகளுக்கு பழுது பார்க்க மற்றும் மொத்த வீட்டை இழந்தவர்களுக்கு புது வீடு வழங்கப்படும் 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முழுவதுமாக சேதமடைந்து வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு 4 லட்சமும் பகுதியாக சேதம் அடைந்த வீடுகளுக்கு இரண்டு லட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.